ஆறாம் வகுப்பு அறிவியல் வினா விடை - பருவம் 2- மின்னியல்
VI. மிகக் குறுகிய விடையளி: Question 1. கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில் மின்விளக்கு A மட்டும் ஒளிர வேண்டும் எனில் எந்தெந்த சாவி(கள்) மூடப்பட வேண்டும். விடை: மின்விளக்கு A மட்டும் ஒளிர K1 மற்றும் K2 சாவிகள் மட்டும் இணைக்கப்பட வேண்டும். Question 2. கூற்று (A) : நமது உடலானது மின் அதிர்வை வெகு எளிதில் ஏற்றுக்கொள்கிறது. காரணம் (R) : மனித உடலானது ஒரு நல்ல மின்கடத்தியாகும். அ) A மற்றும் R இரண்டும் சரி மற்றும் R என்பது A க்கு சரியான விளக்கம். ஆ) A சரி, ஆனால் R என்பது A க்கு சரியான விளக்கம் அல்ல. இ) A-தவறு ஆனால் R சரி. ஈ) A மற்றும் R இரண்டும் சரி, R என்பது A க்கு சரியான விளக்கம் அல்ல. விடை: அ) A மற்றும் R இரண்டும் சரி மற்றும் R என்பது A க்கு சரியான விளக்கம். Question 3. எலுமிச்சம் பழத்தில் இருந்து மின்னோட்டத்தை உருவாக்க முடியுமா? விடை: முடியும். எலுமிச்சம் பழத்தை மின்பகுளியாகவும் தாமிரக்கம்பி மற்றும் குண்டூசியை எலுமிச்சை பழத்திற்குள் செலுத்தி நேர் மற்றும் எதிர்மின்வாய்களாகக் கொண்டு மின்னோட்டத்தை உருவாக்க...