ஆறாம் வகுப்பு அறிவியல் வினா விடை - பருவம் 2- மின்னியல்

 VI. மிகக் குறுகிய விடையளி:

Question 1.
கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில் மின்விளக்கு A மட்டும் ஒளிர வேண்டும் எனில் எந்தெந்த சாவி(கள்) மூடப்பட வேண்டும்.



விடை:
மின்விளக்கு A மட்டும் ஒளிர K1 மற்றும் K2 சாவிகள் மட்டும் இணைக்கப்பட வேண்டும்.

Question 2.
கூற்று (A) : நமது உடலானது மின் அதிர்வை வெகு எளிதில் ஏற்றுக்கொள்கிறது.
காரணம் (R) : மனித உடலானது ஒரு நல்ல மின்கடத்தியாகும்.
அ) A மற்றும் R இரண்டும் சரி மற்றும் R என்பது A க்கு சரியான விளக்கம்.
ஆ) A சரி, ஆனால் R என்பது A க்கு சரியான விளக்கம் அல்ல.
இ) A-தவறு ஆனால் R சரி.
ஈ) A மற்றும் R இரண்டும் சரி, R என்பது A க்கு சரியான விளக்கம் அல்ல.
விடை:
அ) A மற்றும் R இரண்டும் சரி மற்றும் R என்பது A க்கு சரியான விளக்கம்.

Question 3.
எலுமிச்சம் பழத்தில் இருந்து மின்னோட்டத்தை உருவாக்க முடியுமா?
விடை:
முடியும். எலுமிச்சம் பழத்தை மின்பகுளியாகவும் தாமிரக்கம்பி மற்றும் குண்டூசியை எலுமிச்சை பழத்திற்குள் செலுத்தி நேர் மற்றும் எதிர்மின்வாய்களாகக் கொண்டு மின்னோட்டத்தை உருவாக்க முடியும்.

Question 5.
டார்ச் விளக்கில் எவ்வகையான மின்சுற்று பயன்படுத்தப்படுகிறது?
விடை:
டார்ச் விளக்கில் எளிய மின்சுற்று பயன்படுத்தப்படுகிறது.

VII. குறுகிய விடையளி :

Question 1.
தொடரிணைப்பு ஒன்றிற்கு மின்சுற்றுப் படம் வரையவும்.
விடை:



Question 2.
கடிகாரத்தில் பயன்படுத்தப்படும் மின்கலன் மூலம் நமக்கு மின் அதிர்வு ஏற்படுமா? விளக்கம் தருக.
விடை:
கடிகாரத்தில் பயன்படுத்தப்படும் மின்கலன் மூலம் நமக்கு மின் அதிர்வு ஏற்படாது. ஏனெனில் கடிகார மின்கலனின் மின்னழுத்தம் மிக மிகக் குறைவு. (1.5V)

Question 3.
வெள்ளி உலோகம் மிகச் சிறந்த மின் கடத்தியாகும். ஆனால் அது மின் கம்பி உருவாக்கப் பயன்படுத்தப்படுவதில்லை ? ஏன்?
விடை:
வெள்ளி விலை உயர்ந்த உலோகம். எனவே பொருளாதார ரீதியாக மின்கம்பி உருவாக்க பயன்படுத்துவதில்லை.

VIII. விரிவான விடையளி:

Question 1.
மின்மூலங்கள் என்றால் என்ன? இந்தியாவில் உள்ள பல்வேறு மின் நிலையங்கள் பற்றி விளக்குக.
விடை:
மின்சாரத்தை உருவாக்கும் மூலங்கள் மின்மூலங்கள் எனப்படும். அனல் மின் நிலையங்கள் :

  1. அனல் மின்நிலையங்களில் நிலக்கரி, டீசல் (அ) வாயுக்களை எரித்து உருவாக்கப்படும் நீராவியால் டர்பைன் சுழற்றப்பட்டு மின்சாரம் உருவாக்கப்படுகிறது.
  2. இங்கு வெப்ப ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது.
    நீர் மின் நிலையங்கள் ;

1.   அணைக்கட்டில் பாயும் நீரால் டர்பைன் சுழற்றப்பட்டு மின்சாரம் உருவாக்கப்படுகிறது.

2.   இங்கு இயக்க ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது.

அறிவியல் அணுமின் நிலையம் :

  1. அணுக்கரு ஆற்றலைக் கொண்டு நீர் கொதிக்க வைக்கப்பட்டு டர்பைன் இயக்கப்படுகிறது.
  2. இங்கு அணுக்கரு ஆற்றல் இயக்க ஆற்றலாக பின் மின் ஆற்றலாக மாற்றப்படுகிறது. காற்றாலை :

1.   காற்றின் ஆற்றலால் டர்பைன் சுழற்றப்பட்டு மின்சாரம் உருவாக்கப்படுகிறது.

2.   இயக்க ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது.

Question 2.
மின்சுற்றுகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மின்சாதனங்களின் பெயர்களையும் அவற்றின் குறியீடுகளையும் பட்டியலிடுக.
விடை:



Question 3.
மின்கடத்திகள் மற்றும் அரிதிற்கடத்திகள் குறித்து சிறு குறிப்பு வரைக.
விடை:
மின்கடத்திகள் :

  1. மின்னூட்டங்களை தன் வழியே செல்ல அனுமதிக்கும் பொருட்கள் மின்கடத்திகள் எனப்படும்.
  2. (எ.கா.) உலோகங்கள் (தாமிரம், இரும்பு) மாசுப்பட்ட நீர் மற்றும் புவி

போன்றவை. அரிதிற் கடத்திகள் (மின்கடத்தாப் பொருள்கள்):

  1. மின்னூட்டங்களை தன் வழியே செல்ல அனுமதிக்காத பொருட்கள் அரிதிற்கடத்திகள் (அ) மின்கடத்தாப் பொருட்கள் எனப்படும்.
(எ.கா.) பிளாஸ்டிக், கண்ணாடி, மரம், ரப்பர், பீங்கான், எபோனைட் போன்றவை

Comments

Popular posts from this blog

How to use ggforce(Visualization) Package in R

R Programming Introduction

Print Mirror Upper Star Triangle Pattern using java