ஆறாம் வகுப்பு அறிவியல் வினா விடை - பருவம் 2 -வெப்பம்

 

VII. மிகக் குறுகிய விடையளி:

Question 1.
வீட்டில் எந்தெந்த மின்சார சாதனங்களிலிருந்து நாம் வெப்பத்தைப் பெறுகிறோம் எனப் பட்டியலிடுக.
விடை:

  1. மின் இஸ்திரிப் பெட்டி
  2. மின் வெப்பக்கலன்
  3. மின் நீர் சூடேற்றி

Question 2.
வெப்ப நிலை என்றால் என்ன?
விடை:
ஒரு பொருள் எவ்வளவு வெப்பமாக அல்லது குளிர்ச்சியாக உள்ளது என்பதை அளவிடும் அளவு வெப்பநிலை எனப்படும்.

Question 3.
வெப்பவிரிவு என்றால் என்ன?
விடை:
ஒரு பொருளை வெப்பப்படுத்தும் பொழுது அது விரிவடைவது அப்பொருளின் வெப்பவிரிவு எனப்படும்
.

Question 4.
வெப்பச்சமநிலை பற்றி நீ அறிந்ததைக் கூறுக.
விடை:

  1. வெப்பத் தொடர்பில் உள்ள இரு பொருள்களின் வெப்பநிலை சமமாக இருந்தால் அவை வெப்பச்சமநிலையில் உள்ளன எனலாம்.
  2. வெப்பச்சமநிலையில் ஒன்றின் வெப்பநிலை மற்றொன்றை பாதிப்பதில்லை.

VIII. குறுகிய விடையளி:

Question 1.
வெப்பத்தினால் திடப்பொருட்களின் மூலக்கூறுகளில் ஏற்படும் மாற்றங்களை விவரி.
விடை:

  1. வெப்பத்தினால் திடப்பொருட்களின் மூலக்கூறுகளில் இடைவெளி அதிகரிக்கிறது.
  2. மூலக்கூறுகளின் அதிர்வும் இயக்கமும் அதிகரிக்கின்றன.
  3. வெப்பநிலை அதிகரிக்கும்.

Question 2.
வெப்பம் மற்றும் வெப்பநிலை வேறுபடுத்துக.
விடை:



IX. விரிவான விடையளி:

Question 1.
வெப்பவிரிவைத் தகுந்த உதாரணங்களுடன் விளக்குக.
விடை:
ஒரு பொருள் வெப்பப்படுத்தப்படும் போது அது விரிவடைகிறது. இது வெப்ப விரிவு எனப்படும்.
உதாரணங்கள் :

இரயில் தண்டவாளம் அமைக்கும் போது அதன் இரு இரும்புப் பாளங்களுக்கிடையே இடைவெளி விடப்படுகிறது. காரணம் வெயில் காலத்தில் அது விரிவடையும்.

மேம்பாலங்களில் கற்காரைப் பாளங்களுக்கிடையே இடைவெளி விடப்படுகிறது. ஏனெனில் கோடைக்காலத்தில் வெப்பத்தால் அவை விரிவடையும்.

மின்கம்பங்களுக்கிடையே மின்சாரக்கம்பி கோடைக்காலங்களில் தொய்வாகவும், குளிர்காலங்களில் நேராகவும் இருக்கும். காரணம் வெப்பம் அதிகம் உள்ள போது உலோகங்கள் விரிவடைகின்றன. குளிர்காலங்களில் சுருங்குகின்றன.

இரு உலோகத் தகடுகளை இணைக்க சூடான கடையாணியை துளைகளில் பொருத்தி சுத்தியலால் அடித்து புதிய தலைப்பகுதி உருவாக்கப்படும். கடையாணி குளிரும் போது சுருங்குவதால் தகடுகளை இறுக்கமாக பிடித்துக் கொள்கிறது.


Comments

Popular posts from this blog

How to use ggforce(Visualization) Package in R

R Programming Introduction

Print Mirror Upper Star Triangle Pattern using java