வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்-ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் வினா விடை - பருவம் 2
VI. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளி.
Question 1.
நான்கு வேதங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:
- ரிக்
- யஜூர்
- சாம
- அதர்வ
Question 2.
வேதகால மக்களால் பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகள் யாவை?
விடை:
- யானைகள்
- பசு
- வெள்ளாடு
- செம்மறியாடு
- குதிரை
Question 3.
‘பெருங்கற்காலம் பற்றி நீங்கள் அறிந்தது என்ன?
விடை:
இறந்தவர்களைப் புதைத்த இடங்களை கற்பலகைகளைக் கொண்டு மூடியதால் இக்காலம்
பெருங்கற்காலம் என அழைக்கப்பட்டது.
Question 4.
‘கற்திட்டைகள்’ என்பது என்ன?
விடை:
- கற்திட்டைகள்
பெருங்கற்காலத்தின் நினைவுச் சின்னம்
- இறந்தவர்களைப்
புதைத்த இடத்தில் இருபுறமும் இரண்டு கற்பலகைகள் செங்குத்தாக நடப்படும்.
அவற்றின் மீது மற்றொரு கற்பலகை படுக்கை வசத்தில் வைக்கப்படும்.
Question 5.
முதுமக்கள் தாழிகள் என்றால் என்ன?
விடை:
இறந்தவர்களைப் புதைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட பெரிய மண் ஜாடிகள் முதுமக்கள்
தாழிகள் ஆகும்.
Question 6.
வேதகாலத்தில் வணிகப் பரிமாற்றத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்களின் பெயர்களைக்
கூறுக.
விடை:
- நிஷ்கா
- சத்மனா
(தங்கம்)
- கிருஷ்ணாலா
(வெள்ளி)
Question 7.
தமிழ்நாட்டில் காணப்படும் பெருங்கற்கால நினைவுச் சின்னங்களின் பெயர்களைக்
குறிப்பிடுக.
விடை:
- முதுமக்கள்
தாழிகள்
- கற்திட்டைகள்
- நினைவு
கற்கள்
- நடுகற்கள்
VII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி
Question 1.
கொடுமணலிலுள்ள தொல்லியல் ஆய்விடம் குறித்து சுருக்கமாய் எழுதுக.
விடை:
- கொடுமணல்
ஈரோடு மாவட்டத்தில் உள்ளது.
- பதிற்றுப்பத்தில்
இடம்பெற்றுள்ள கொடுமணம் என்னும் ஊர் இதுவே என அடையாளப்படுத்தப்படுகிறது.
- தமிழ்
பிராமி எழுத்துக்களைக் கொண்ட 300க்கும் அதிகமான மண்பாண்டங்கள்
கண்டறியப்பட்டுள்ளன.
- நூல்
சுற்றும் சுழல் அச்சுகள், சுருள்கள், துணிகளின் சிறிய துண்டுகள், கருவிகள்,
ஆயுதங்கள் குறிப்பாக சிவப்பு நிற மணிக்கற்கள் கண்டறியப்பட்டுள்ளன.
- புதைகுழி
மேட்டிற்கு அருகே நினைவுக்கல் காணப்படுகிறது.
Question 2.
வேதகாலப் பெண்கள் குறித்து ஒரு பத்தி எழுதுக.
விடை:
- ரிக்
வேத காலத்தில் மனைவி குடும்பத்தின் தலைவியாக மதிக்கப்பட்டார்.
- பெண்கள்
தனது கணவருடன் வீட்டில் சடங்குகள் நடத்தினர்.
- குழந்தைத்
திருமணத்தையும் உடன்கட்டை ஏறுதலையும் அறிந்திருக்கவில்லை.
- விதவை
மறுமணத்திற்கு தடை இல்லை.
- சொத்துரிமையும்,
பொது நிகழ்வுகளில் பங்கேற்கும் உரிமையும் மறுக்கப்பட்டது.
- பின்
வேதகாலத்தில் சடங்குகளை நடத்துதல், விதவை மறுமணம், கல்வி ஆகியன
மறுக்கப்பட்டது. பலதார மணம் சாதாரணமாக நடைபெற்றது.
3. குருகுலக் கல்வி முறைக்கும் நவீன கல்விமுறைக்கும் இடையே
உள்ள வேறுபாடுகள் யாவை?
விடை:
- நவீன
கால கல்வி முறையை ஒப்பீடு செய்யும் பொழுது குருகுலக் கல்வி முறை என்பது
பழங்காலக் கற்றல் முறை.
- மாணவர்கள்
(சிஷ்யர்கள்) குருவுடன் தங்கியிருந்து, அவருக்குச் சேவை செய்து அதே வேளையில்
கல்வி கற்று அறிவைப் பெருக்கிக் கொள்வர்.
- வாய்மொழி
மரபில் மாணவர்கள் பாடங்களைக் கற்றனர். அனைத்தையும் மனப்பாடம் செய்தனர்.
- நான்கு
வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், இலக்கணம், தர்க்கவியல், நெறி முறைகள்,
ஜோதிடம், கணிதம், இராணுவ உத்திகள் ஆகியன கற்றுக் கொடுக்கப்பட்ட பாடங்கள்.
- இரு
பிறப்பாளர்கள் மட்டுமே மாணவர்களாகச் சேர்க்கப்பட்டனர். ஒழுக்கமான
வாழ்க்கைக்கான பயிற்சி வழங்கப்பட்டது.
Comments
Post a Comment