மனித உறுப்பு மண்டலங்கள்-ஆறாம் வகுப்பு அறிவியல் வினா விடை - பருவம் 2
VII. மிகக் குறுகிய விடையளி :
Question 1.
எலும்பு மண்டலம் என்றால் என்ன ?
விடை:
- எலும்பு
மண்டலமானது எலும்புகள், குருத்தெலும்புகள் மற்றும் மூட்டுக்களால்
ஆக்கப்பட்டுள்ளது.
- தசைகள்
இணைக்கப்படுவதற்கு ஏற்ற பகுதியாக திகழ்கின்றது.
- நடத்தல்,
ஓடுதல், மெல்லுதல் போன்ற செயல்களுக்கு இது உதவுகிறது.
4. Question 2.
எபிகிளாட்டிஸ் என்றால் என்ன?
விடை:
மூச்சுக்குழலின் மேற்பகுதியிலுள்ள குரல்வளை மூடி (எப்பி கிளாட்டிஸ் என்ற அமைப்பு
சுவாசப் பாதைக்குள் உணவு செல்வதை தடுக்கிறது.
5. Question 3.
மூவகையான இரத்தக்குழாய்களின் பெயர்களை எழுதுக.
விடை:
தமனிகள், சிரைகள் மற்றும் தந்துகிகள் ஆகும்.
6. Question 4.
விளக்குக – மூச்சுக்குழல்
விடை:
- பொதுவாக
காற்றுக் குழாய் என்றழைக்கப்படும் மூச்சுக் குழலானது குருத்தெலும்பு வளையங்களால்
தாங்கப்பட்டுள்ளது.
- இது
குரல்வளை மற்றும் தொண்டையை நுரையீரல்களுடன் இணைத்து காற்று செல்வதற்கு ஏதுவாக
அமைந்துள்ளது.
Question 5.
செரிமான மண்டலத்தின் ஏதேனும் இரண்டு பணிகளை எழுதுக.
விடை:
- சிக்கலான
உணவுப் பொருட்களை எளிய மூலக்கூறுகளாக மாற்றுகிறது.
- செரிக்கப்பட்ட
உணவை உட்கிரகித்தல் போன்ற செயல்களைச் செய்கிறது.
Question 6.
கண்ணின் முக்கிய பாகங்களின் பெயர்களை எழுதுக.
விடை:
- கண்
மூன்று முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது.
- அவை
கார்னியா, ஐரிஸ் மற்றும் கண்மணி (பியூப்பில்)
Question 7.
முக்கியமான ஐந்து உணர் உறுப்புக்களின் பெயர்களை எழுதுக.
விடை:
- கண்கள்
- செவிகள்
- மூக்கு
- நாக்கு
- தோல்
VIII. குறுகிய விடையளி:
Question 1.
விலா எலும்புக்கூடு பற்றி சிறு குறிப்பு எழுதுக.
விடை:
- விலா
எலும்புக்கூடு 12 இணைகள் கொண்ட வளைந்த தட்டையான விலா எலும்புகளைக்
கொண்டுள்ளது.
- இது
மென்மையான இதயம், நுரையீரல் போன்ற இன்றியமையாத உடல் உறுப்புகளைப்
பாதுகாக்கின்றன.
Question 2.
மனித எலும்பு மண்டலத்தின் பணிகளை எழுதுக.
விடை:
- எலும்பு
. மண்டலம் உடலுக்கு வடிவம் கொடுக்கிறது.
- தசைகள்
இணைக்கப்படுவதற்கு ஏற்ற பகுதியாக எலும்புகள் திகழ்கின்றன.
- நடத்தல்,
ஓடுதல், மெல்லுதல் போன்ற செயல்களுக்கு எலும்பு மண்டலம் உதவுகிறது.
- உடலில்
உள்ள மிருதுவான உள் உறுப்புகளைப் பாதுகாக்கிறது.
Question
3.
கட்டுப்படாத இயங்கு தசைக்கும் கட்டுபாட்டில் இயங்கும்
தசைக்குமுள்ள வேறுபாட்டை எழுதுக.
விடை:
IX. விரிவான விடையளி
Question 1.
நாளமில்லா சுரப்பி மண்டலம் மற்றும் நரம்பு மண்டலத்தின் பணிகளை பட்டியலிடுக.
விடை:
நாளமில்லாச் சுரப்பி மண்டலத்தின் பணிகள் :
- உடலின்
பல்வேறு செயல்களை ஒழுங்குபடுத்தி இது நமது உடலின் உட்புற சூழலைப்
பராமரிக்கின்றது.
- திசுக்களுக்கு
“ஹார்மோன்கள்” எனப்படும் வேதித் தூதுவர் மூலம் செய்தி அனுப்பி செயல்களைக்
கட்டுப்படுத்துகிறது. (எ.கா.) வளர்ச்சி ஹார்மோன் – வளர்ச்சியை தூண்டுகிறது.
அட்ரீனலின் ஹார்மோன் – கோபம், பயம் போன்ற நேரங்களில் செயல்படுகிறது.
நரம்பு மண்டலத்தின் பணிகள் :
- உணர்ச்சி,
உள்ளீடு : உணர் உறுப்புகளிலிருந்து சமிக்ஞை கடத்தப்படுதல்
- ஒருங்கிணைப்பு
: உணர்ச்சி சமிக்ஞைகளை ஒருங்கிணைந்து வெளிப்பாடுகளை உருவாக்குதல் மற்றும்
பதில்களை உருவாக்குதல்.
- ஒருவர்
வாழ்நாளில் மூளையில் 100 மில்லியனுக்கும் அதிகமான தகவல்கள் சேமித்து வைக்க
முடியும்.
- செயல்
வெளிப்பாடு : மூளை மற்றும் தண்டுவடத்திலிருந்து சமிக்ஞைகளை செயல்படும் உறுப்புகளாகிய
தசை மற்றும் சுரப்பி செல்களுக்குக் கடத்துதல்.
Question
2.
கீழ்கண்ட மனித கழிவு நீக்க மண்டலத்தில் முக்கியமான
நான்கு பாகங்களை எழுதுக. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி.
அ. மேற்கண்ட கழிவு நீக்க மண்டலத்தில் எந்த பாகம் இரத்தத்திலுள்ள
அதிக உப்பு மற்றும் நீரை நீக்குகிறது.
ஆ. சிறுநீர் எங்கு சேமிக்கப்படுகிறது?
இ. மனித உடலிலிருந்து சிறுநீர் எந்தக் குழல் வழியாக
வெளியேற்றப்படுகிறது?
ஈ. சிறு நீரகத்திலுள்ள சிறுநீரை எந்தக் குழல் சிறுநீர்ப்பைக்கு
கொண்டு செல்கிறது?
விடை:
அ. சிறுநீரகத்தின் அடிப்படை செயல் அலகு நெப்ரான்களாகும்.
சிறுநீர்ப்பை இவை இரத்தத்திலுள்ள அதிக உப்பு மற்றும் நீரை நீக்குகிறது.
சிறுநீர்ப் புறவழி
ஆ. சிறுநீர் சிறுநீர்ப்பையில் சேமிக்கப்படுகிறது.
இ. சிறுநீர்ப் புறவழி எனப்படும் யூரித்ரா சிறுநீரை
வெளி யேற்றுகிறது.
ஈ. சிறுநீர்க்குழாய் சிறுநீரை சிறுநீர்ப்பைக்கு கொண்டு
செல்கிறது.


Comments
Post a Comment