செல்- ஆறாம் வகுப்பு அறிவியல் வினா விடை - பருவம் 2
VII. மிகக் குறுகிய விடையளி:
Question 1.
1665 ஆம் ஆண்டு செல்லைக் கண்டறிந்தவர் யார்?
விடை:
ஆங்கில அறிவியலாளர் ராபர்ட் ஹீக் , 1665 ஆம் ஆண்டு மெல்லிய கார்க் (மரத் தக்கை) கை
நுண்ணோக்கியைக் கொண்டு கண்டபோது செல்களைக் கண்டறிந்தார்.
Question 2.
நம்மிடம் உள்ள செல்கள் எந்த வகையைச் சார்ந்த செல்கள்?
விடை:
யூகேரியாட்டிக் வகை செல்கள் ஆகும்.
Question 3.
செல்லின் முக்கிய கூறுகள் யாவை?
விடை:
- செல்லைச்
சுற்றிக் காணப்படும் வெளி உறையான செல்சவ்வு
- திரவநிலை
சைட்டோபிளாசம்
- உட்கரு
Question 4.
தாவர செல்லில் மட்டும் காணப்படும் நுண்ணுறுப்புகள் எது?
விடை:
- செல்
சுவர்
- பசுங்கணிகம்
Question 5.
யூகேரியாட்டிக் செல்லிற்கு மூன்று எடுத்துக்காட்டுகள் தருக?
விடை:
- தாவர
செல்கள்
- விலங்கு
செல்கள்
- பெரும்பான்மையான
பூஞ்சைகள் மற்றும் ஆல்காக்கள்
Question 6.
நகரும் மையப்பகுதி என்று அழைக்கப்படும் பகுதி எது?
விடை:
சைட்டோபிளாசம் நகரும் மையப்பகுதியாகும்.
Question 7.
சிவா “சிறிய வெங்காயத்தை பெரிய வெங்காயத்தோடு ஒப்பிடும் போது, பெரிய வெங்காயம்
பெரிய செல்களைக் கொண்டுள்ளன” என்கிறான். இதை நீ ஏற்றுக் கொள்கிறாயா? மறுக்கிறாயா?
ஏன்?
விடை:
மறுக்கிறேன் – ஏனெனில் செல்லின் அளவிற்கும், உயிரினத்தின் அளவிற்கும் தொடர்பு
இல்லை.
(எ.கா) சுண்டெலியின் செல்லைவிட யானையின் செல் பெரியதாக இருக்க வேண்டும் என்று
அவசியமில்லை. அவ்வாறே சிறிய வெங்காயத்தோடு ஒப்பிடும் போது பெரிய வெங்காய செல்கள்
பெரிதாக இருப்பதில்லை.
VIII. குறுகிய விடையளி:
Question 1.
உயிரினங்களைக் கட்ட உதவும், கட்டுமானம் – செல் எனப்படுகிறது ஏன்?
விடை:
- ஒரு
செங்கல் கட்டிடத்தின் அடிப்படை அலகாக இருப்பது போலவே, ஒரு செல் மனித,
விலங்கு, தாவர உடலின் அடிப்படை அலகாக உள்ளது.
- எனவே
உயிரினங்களைக் கட்ட உதவும், கட்டுமானம் செல் எனப்படுகிறது.
Question 3.
புரோகேரியாட்டிக், யூகேரியாட்டிக் செல்கள் – வேறுபடுத்துக.
விடை:
Question 4.
நுண்ணோக்கியில் நீ கண்ட தாவர செல் மற்றும் விலங்கு செல்லின் படம் வரைக.
விடை:
- சென்டிரியோல்
– தாவர செல்லில் காணப்படாது
- செல்சுவர்,
பசுங்கணிகம் – விலங்கு செல்லில் காணப்படாது.
Question 5.
செல் உயிரியலில் இராபர்ட் ஹூக்கின் பங்களிப்பு பற்றி விளக்குக.
இராபர்ட் ஹூக் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர்.
விடை:
- அவர்
அக்கால நுண்ணோக்கியை மேம்படுத்தி, கூட்டு நுண்ணோக்கியை உருவாக்கினார்.
- அவர்
நீர் லென்சைக் கொண்டு நுண்ணோக்கியின் கீழ் வைக்கப்பட்ட பொருளை கண்டறிந்தார்.
- மரத்தக்கையின்
சிறிய மெல்லிய பகுதியை, நுண்ணோக்கியிலிருந்து பார்த்து செல்களைக்
கண்டறிந்தார்.
- அதனடிப்படையில்
1665 ஆம் ஆண்டு மைக்ரோகிராபியா என்ற தனது நூலில் ‘செல்’ என்ற வார்த்தையை
பயன்படுத்தினார்.
- செல்லைப்
பற்றிப் படிக்கும் அறிவியல் பிரிவு செல் உயிரியல் எனப்படுகிறது.
IX. விரிவான விடையளி :
Question 1.
எவையேனும் ஐந்து செல் நுண்ணுறுப்புகளையும், அதன் பணிகளையும் அட்டவணைப்படுத்துக.
விடை:
Question 2.
புரோகேரியாட்டிக் செல்லின் படம் வரைந்து பாகங்களை குறி.
விடை:




Comments
Post a Comment