மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் -ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் வினா விடை - பருவம் 2

 

VI. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்.

Question 1.
சமணத்தின் மூன்று ரத்தினங்கள் எவை?
விடை:

  • நன்னம்பிக்கை
  • நல்லறிவு
  • நற்செயல்

Question 2.
பௌத்தத்தின் இரு பிரிவுகள் எவை?

விடை:

  • ஹீனயானம்
  • மகாயானம்

Question 3.
‘ஜினா என்பதின் பொருள் என்ன?
விடை:
ஜினா என்பதின் பொருள் தன்னையும் வெளியுலகத்தையும் வெல்வது என்பதாகும்.

Question 4.
பௌத்தத்திற்கும் சமணத்திற்கும் உள்ள இரண்டு பொதுவான கூறுகளை எழுதுக.

விடை:

  • வேதங்களின் ஆதிக்கத்தை வெறுத்தல்.
  • இரத்த பலிகளை எதிர்த்தல்.

Question 5.
பௌத்த சங்கத்தைப் பற்றி குறிப்பெழுதுக.
விடை:

  • புத்தர் தனது கருத்துக்களைப் பரப்புவதற்காக நிறுவிய அமைப்பு சங்கம்.
  • சங்கத்தின் உறுப்பினர்களான துறவிகள் பிட்சுக்கள் என அழைக்கப்பட்டனர்.
  • மிக எளிய வாழ்க்கை மேற்கொண்டனர்.

Question 6.
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்த சீனப் பயணியின் பெயரைக் குறிப்பிடுக.
விடை:
யுவான் சுவாங்

Question 7.
சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள பெண் ஜைனத் துறவியின் பெயர் என்ன?
விடை:
கவந்தியடிகள்

VII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

Question 1.
பௌத்தத்தின் எட்டு நெறிகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • நல்ல நம்பிக்கை
  • நல்ல எண்ணம்
  • நல்ல பேச்சு நல்ல செயல்
  • நல்ல வாழ்க்கை
  • நல்ல முயற்சி
  • நல்ல அறிவு
  • நல்ல தியானம்

Question 2.
சமணத்தின் முக்கியமான ஐந்து நடத்தை விதிகள் எவை?
விடை:

  • அகிம்சை – எந்த உயிரினத்தையும் துன்புறுத்தாமல் இருப்பது
  • சத்யா – உண்மையை மட்டுமே பேசுதல்
  • அஸ்தேய – திருடாமை
  • அபரிக்கிரகா – பணம், பொருள், சொத்துக்கள் மீது ஆசை கொள்ளாமல் இருப்பது.
  • பிரம்மச்சரியா – திருமணம் செய்து கொள்ளாமை.

Question 3.
பௌத்தத்தின் நான்கு பேருண்மைகளை எடுத்துரைக்கவும்.
விடை:

  • வாழ்க்கை துன்பங்கள், துயரங்கள் நிறைந்தது.
  • ஆசையே துன்பங்களுக்கான காரணம்.
  • ஆசையைத் துறந்துவிட்டால் துன்ப துயரங்களைப் போக்கிவிடலாம்.
  • சரியான பாதையைப் பின்பற்றினால் (எண் வகை வழிகள்) ஆசைகளை வென்றுவிடலாம்.

Question 4.
பௌத்தத்தின் பிரிவுகளான ஹினயான, மகாயான பிரிவுகளிடையே உள்ள ஏதேனும் மூன்று வேறுபாடுகளை எழுதவும்.

விடை:
ஹீனயானம் :

  • புத்தரின் சிலைகளையோ உருவப்படங்களையோ வணங்கமாட்டார்கள்.
  • மிக எளிமையாக இருப்பர்.
  • பிராகிருத மொழியைப் பயன்படுத்தினர்.

மகாயானம் :

  • புத்தரின் உருவங்களை வணங்கினர்.
  • விரிவான சடங்குகளைப் பின்பற்றினர்.
  • சமஸ்கிருத மொழியைப் பயன்படுத்தினர்.

Question 5.
சங்ககாலத்தில் பௌத்தமும் சமணமும் செழித்தோங்கின. ஒவ்வொன்றுக்கும் ஏதாவது இரண்டு சான்றுகளைத் தருக.

விடை:
சமணம் :

  • அறவோர் பள்ளி என்பது சமணத்துறவிகள் வாழ்ந்த இடங்கள் என மணிமேகலையில் குறிப்பு உள்ளது.
  • கோவலனும் கண்ணகியும் மதுரைக்குச் செல்லும் வழியில் சமண பெண் துறவியான கவுந்தியடிகள் அவர்களை ஆசீர்வதித்து அவர்களுடன் சென்றதாக தமிழ் காப்பியம் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.

பௌத்தம் :

  • சங்க காலத்திற்குப் பின்னர் இயற்றப்பட்ட இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை பௌத்த இலக்கியமாகும்.
  • கி.பி. ஏழாம் நூற்றாண்டில் யுவான் சுவாங் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தார். அசோகரால் கட்டப்பட்ட 100 அடி உயரமுள்ள ஸ்தூபியை அவர் பார்த்தார்.

Question 1.
கர்மா – ஒரு மனிதனின் செயல்கள். ஏதாவது 10 நல்ல செயல்களைக் குறிப்பிடுக.
விடை:

  • தேவையில் இருக்கின்ற நண்பனுக்கு உதவுதல்.
  • உங்களின் முதல் நற்காரியம் பிறரன்புப் பணிக்காக (தர்மம்) இருக்கட்டும்.
  • ஒரு மரம் நடுவோம்.
  • பழைய அலைபேசியொன்றை தானம் செய்வோம்.
  • இரத்ததானம் செய்வோம்.
  • நம்மில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி அதன்மூலம் சிறந்த நபராக மாற தீர்மானிப்போம்.
  • சுய கௌரவத்தை விழுங்கி, பெரிதாகவோ அல்லது சிறிதாகவோ செய்யப்பட்ட ஒரு செயலுக்காக – மன்னிப்பு வேண்டுவோம்.
  • பள்ளிக்கல்விக்குத் தேவையான பொருட்களை, உரிமைகளின் தேடலில் இல்லங்களில் வாழும் குழந்தைகளுக்கு வழங்குவோம்.
  • தொலைபேசியில் உரையாடும் பொழுது இனிமையாக உரையாடுவோம்.
  • உணவுப்பொருள் வாங்க வெளியே செல்கின்ற பொழுது கூடுதலாக ஒரு பொருளை வீடற்ற ஒருவருக்கு அல்லது உணவுக் கூடத்திற்கு வழங்குவதற்காக வாங்குவோம்.

Comments

Popular posts from this blog

How to create Animated 3d chart with R.

Linux/Unix Commands frequently used

R Programming Introduction