கணினியின் பாகங்கள்-ஆறாம் வகுப்பு அறிவியல் வினா விடை - பருவம் 2
III. குறுகிய விடையளி:
Question 1.
கணினியின் கூறுகள் யாவை?
விடை:
- உள்ளீட்டகம்
(Input Unit)
- மையச்செயலகம்
(CPU)
- வெளியீட்டகம் (Output Unit)
Question
2.
உள்ளீட்டகத்திற்கும் வெளியீட்டகத்திற்கும் உள்ள வேறுபாடுகள்
இரண்டு கூறுக.
விடை:
Question 3.
பல்வேறு இணைப்பு வடங்களைக் கூறி, எவையேனும் மூன்றனை விளக்குக.
விடை:
இணைப்புவடங்களின் வகைகள்:
- (VGA – Video Graphics Array)
- எச்டிஎம்ஐ
(HDMI – High Definition Multimedia Interface)
- யுஎஸ்பி
(USB – Universal Serial Bus)
- தரவுக்கம்பி
(Data Cable)
- ஒலி
வடம் (Audio Cable)
- மின்
இணைப்புக்கம்பி (Power cord)
- ஒலி
வாங்கி இணைப்புக்கம்பி (Mic Cable)
- ஈதர்
நெட் இணைப்புக்கம்பி (Ethernet Cable)
1. யுஎஸ்பி (USB) இணைப்பு வடம்:
அச்சுப்பொறி (Printer), வருடி (Scanner), விரலி (Pen drive), சுட்டி (Mouse), விசைப்பலகை
(Key Board), இணையப்படக்கருவி (Web Camera), திறன்பேசி (Smart Phone) போன்றவற்றைக்
கணினியுடன் இணைக்க பயன்படுகிறது.
2. தரவுக்கம்பி (Data cable) இணைப்பு வடம் :
கணினியின் மையச்செயலகத்துடன் கைப்பேசி, கையடக்கக் கணினி (Tablet) ஆகியவற்றை இணைக்க
தரவுக்கம்பி பயன்படுகிறது.
3. மின் இணைப்பு வடம் (Power card) :
மையச்செயலகம், கணினித்திரை, ஒலிப்பெருக்கி, வருடி ஆகியவற்றிற்கு மின்இணைப்பை
வழங்குகிறது.


Comments
Post a Comment