தேசியச் சின்னங்கள்-ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் வினா விடை - பருவம் 2
IX. விடையளிக்கவும்.
Question 1.
தேசியக் கொடியில் உள்ள நிறங்கள் குறிப்பன எவை?
விடை:
- காவிநிறம்
தைரியத்தையும் தியாகத்தையும் குறிக்கிறது.
- பச்சைநிறம்
செழுமையையும் வளத்தையும் குறிக்கிறது.
- வெள்ளை
நிறம் நேர்மை, அமைதி மற்றும் தூய்மையைக் குறிக்கிறது.
- கருநீல
நிறத்தில் அமைந்துள்ள அசோக் சக்கரம் அறவழியையும் அமைதியையும்
வலியுறுத்துகிறது.
Question 2.
தேசிய இலச்சினையின் பாகங்கள் எவை?
விடை:
- மேல்பகுதியில்
நான்கு சிங்க உருவங்கள் ஒன்றுக்கொன்று பின்பக்கமாக பொருந்தியிருக்குமாறு வட்ட
வடிவமான பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
- அடிப்பகுதியில்
யானை, குதிரை, காளை, சிங்கம் ஆகிய உருவங்கள் அமைந்துள்ளன.
Question 3.
தேசியக் கீதத்தின் சிறப்பு அம்சங்கள் எவை?
விடை:
- ஜன
கண மன இரவீந்திரநாத் தாகூரால் வங்காள மொழியில் எழுதப்பட்டது.
- ஜனவரி
24, 1950 இல் இந்திய அரசியலமைப்புச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- இது
இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு அடையாளச் சின்னமாக
விளங்குகிறது.
Question 4.
இந்திய நாணயத்தின் குறியீட்டின் வடிவத்தை வரைந்து வரையறுக்கவும்.
விடை:
- இந்திய
ரூபாய்க் குறியீடு என்பது இந்தியாவின் அதிகாரப்பூர்வ பணக்குறியீடு ஆகும்.
(வடிவமைத்தவர் டி. உதயகுமார்)
- இந்த
வடிவமைப்பு இந்திய அரசால் 15 ஜூலை 2010-ல் மக்களுக்கு அளிக்கப்பட்டது.
Question 5.
தேசிய இலச்சினை எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது?
விடை:
தேசிய இலச்சினை இந்திய அரசின் அலுவல்முறை கடித முகப்புகளிலும் இந்திய
நாணயங்களிலும் கடவுச்சீட்டுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.
Question 6.
தேசிய உறுதி மொழியை எழுதியவர் யார்?
விடை:
தேசிய உறுதி மொழியை எழுதியவர் பிதிமாரி வெங்கட சுப்பாராவ்.
Question
7.
தேசிய இலச்சினையின் அடிப்பாகத்தில் இடம் பெற்றுள்ள
விலங்குகள் எவை?
விடை:
யானை, குதிரை, காளை மற்றும் சிங்கம்
Question 8.
இயற்கை தேசிய சின்னங்கள் எவை?
விடை:
- ஆலமரம்
– மயில்
- கங்கை
ஆறு
- ஆற்று
ஓங்கில்
- ராஜநாகம்
- தாமரை
- புலி
- யானை
- லாக்டோபேசில்லஸ்
- மாம்பழம்
Question
9.
மயில்கள் சரணாலயம் எங்குள்ளது?
விடை:
தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலையில்
மயில்களுக்கான சரணாலயம் உள்ளது.

Comments
Post a Comment