காற்று- ஆறாம் வகுப்பு அறிவியல் வினா விடை - பருவம் 2

 

VIII. மிகக் குறுகிய விடையளி

Question 1.
வளிமண்டலம் என்றால் என்ன? வளிமண்டலத்தில் உள்ள ஐந்து அடுக்குகளின் பெயர்களை தருக.
விடை:
நமது பூமியானது காற்றாலான ஒரு மிகப்பெரிய மேலுறையால் மூடப்பட்டுள்ளது. இது வளிமண்டலம் எனப்படும்.
வளிமண்டலத்தின் 5 அடுக்குகள்.

  1. அடி வளி மண்ட லம் (Troposphere)
  2. அடுக்கு வளி மண்ட லம் (Stratosphere)
  3. இடைவளி மண்ட லம் (Mesosphere)
  4. அயனி மண்ட லம் (Ionosphere)
  5. புறவளி மண்ட லம் (Exosphere)

Question 2.
நிலத் தாவரங்களின் வேர்கள், சுவாசத்திற்கான ஆக்சிஜனை எவ்வாறு பெறுகின்றன?
விடை:

  • மண்ணிலுள்ள காற்று இடைவெளிகளில் ஆக்ஸிஜன் உள்ளது.
  • இந்த ஆக்ஸிஜன் வேர்நுனி மூடிகளின் வழியாகப் பரவல் முறையில் தாவரத்தின் பிறபாகங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

Question 3.
ஒருவரின் ஆடையில் எதிர்பாராத விதமாக தீப்பற்றினால், என்ன செய்ய வேண்டும்? ஏன்?
விடை:

  • கம்பளி (அல்லது) ஈரச்சாக்கு கொண்டு தீயினை முழுவதும் மூட வேண்டும்.
  • பின்பு தரையில் உருட்ட வேண்டும்.
  • ஏனெனில் பொருட்கள் எரிவதற்கு ஆக்சிஜன் (O2) தேவை. இவ்வாறு செய்யும் போது எரிவதற்கு வேண்டிய O2 இல்லாது போக தீ அணைந்து விடுகின்றது. தகுந்த தீயணைப்பானைப் பயன்படுத்துவதும் மிகச்சிறந்தது.

Question 4.
நீங்கள் வாய் வழியாக சுவாசித்தால் என்ன நிகழும் ?
விடை:
பல சுகாதார நிலைமைகள் மற்றும் ஆபத்து காரணிகள் வாய் வழி சுவாசித்தலினால் ஏற்படக்கூடும்.

  • குறட்டை
  • உலர்ந்தவாய்
  • நாள்பட்ட சோர்வு
  • பல் ஆரோக்கியக் குறைவு.

IX. குறுகிய விடையளி

Question 1.
மழைக் காலங்களில் பிஸ்கட்டை மூடாமல் வைக்கும் பொழுது, மொறுமொறுப்புத் தன்மையை இழக்கிறது? ஏன்?
விடை:
மழைக்காலங்களில் காற்றில் அதிகமான ஈரப்பதம் காணப்படும். இதனால் பிஸ்கட் தனது மொறுமொறுப்புத் தன்மையை இழக்கிறது.

Question 2.
பணியிலுள்ள போக்குவரத்துக் காவலர் முகமூடி அணிவதேன்?
விடை:

  • வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையில் மாசுக்கள் கலந்துள்ளன. இந்த மாசு நிறைந்த காற்றினை பணியிலுள்ள போக்குவரத்துக் காவலர் சுவாசிக்க நேர்ந்தால் சுவாசம் மற்றும் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும்.
  • இவற்றை தடுப்பதற்காக போக்குவரத்துக் காவலர் முகமூடி அணிகின்றனர்.

X. விரிவான விடையளி:

Question 1.
தாவரங்களும், விலங்குகளும் ஆக்சிஜன் மற்றும் கார்பன்-டை- ஆக்ஸைடு இவற்றின் இடையே உள்ள சமநிலையை எவ்வாறு பாதுகாக்கின்றன?
விடை:

  • தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடும் ஆக்ஸிஜனை விலங்கினங்கள் தங்கள் சுவாசத்திற்குப் பயன்படுத்துகின்றன.
  • தாவரங்கள் சுவாசித்தலின் போது எடுத்துக்கொண்ட ஆக்ஸிஜனை விட அதிகளவு ஆக்ஸிஜனை ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடுகின்றன.
  • இந்த ஆக்ஸிஜனை, விலங்கினங்கள் தங்கள் சுவாசத்திற்கு எடுத்துக்கொண்டு CO2யை வெளியேற்றுகின்றன.
  • இவ்வாறு வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் (O2) மற்றும் கார்பன்டை ஆக்ஸைடு (CO2) சமநிலை, தாவரங்கள் மற்றும் விலங்குகளின் சுவாசம் மூலமும், தாவரங்களின் ஒளிச் சேர்க்கை மூலமும் பாதுகாக்கப்படுகிறது.

Question 2.
பூமியில் உயிரினங்கள் வாழ வளிமண்டலம் ஏன் தேவைப்படுகிறது?
விடை:

  • உயிரினங்கள் அனைத்தும் உயிர் வாழக் காரணமாக இருக்கும் மிக முக்கியமான தனிமமான ஆக்ஸிஜன் வளிமண்டலத்தில் (காற்றில்) உள்ளது.
  • சூரியனிடமிருந்து வரும் தீங்கு விளைவிக்கக்கூடிய கதிர்வீச்சுகள் புவியின் மேற்பரப்பிற்கு வருவதை வளிமண்டலத்திலுள்ள ஓசோன் படலம் தடுக்கின்றது.
  • புவியில் தகுந்த வெப்பநிலை இருக்கக் காரணம் வளிமண்டலமே, இதன் காரணமாகவே புவியில் உயிரினங்கள் வாழ முடிகிறது.
  • வளிமண்டலத்தில் உள்ள நீராவி, நம் சுற்றுப் புறத்தைக் குளிர்ச்சியாக வைத்திருக்கிறது.

Comments

Popular posts from this blog

How to create Animated 3d chart with R.

Linux/Unix Commands frequently used

R Programming Introduction