குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை-ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் வினா விடை - பருவம் 2

 

VI. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளிக்கவும்.

Question 1.
மௌரியர் காலத்திற்கான இரண்டு இலக்கியச் சான்றுகளைக் குறிப்பிடவும்.
விடை:

  • அர்த்த சாஸ்திரம்
  • முத்ராராட்க்ஷம்

Question 2.
ஸ்தூபி என்றால் என்ன?

விடை:

  • ஸ்தூபி என்பது அரைக்கோள வடிவமுடைய குவிமாடம் போன்ற அமைப்பு. செங்கல் அல்லது கற்களால் கட்டப்பட்டது.
  • புத்தரின் உடல் உறுப்புகளின் எச்சங்கள் ஸ்தூபியின் மையத்தில் வைக்கப்பட்டிருக்கும்.

Question 3.
மகத அரச வம்சங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

விடை:

  • ஹரியங்கா வம்சம்
  • சிசுநாக நம்சம்
  • நந்த வம்சம்
  • மௌரிய வம்சம்

Question 4.
மௌரியர் காலத்தில் அரசு வருவாய் எவற்றிலிருந்து பெறப்பட்டது?
விடை:

  • நிலங்களே அரசுக்கு அதிக வருவாயை ஈட்டித் தந்தது. நிலவரி (பாகா) மொத்த விளைச்சலில் 1/6 பங்கு.
  • கூடுதல் வருவாயாக காடுகள், சுரங்கங்கள், உப்பு மற்றும் நீர்ப்பாசனம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட வரிகள் அமைந்தன.

Question 5.
நகரங்களின் நிர்வாகத்தில் நகரிகா வுக்கு உதவியவர் யார்?
விடை:

  • ஸ்தானிகா
  • கோவா

Question 6.
அசோகரின் இரண்டு மற்றும் பதிமூன்றாம் பாறைப் பேராணைகளிலிருந்து நீங்கள் அறிவதென்ன?
விடை:
அசோகரின் இரண்டு மற்றும் பதிமூன்றாம் பாறைக் கல்வெட்டுகள் குறிப்பிடும் மூவேந்தர்கள்

  • பாண்டியர்
  • சோழர்
  • கேரள புத்திரர் மற்றும் சத்திய புத்திரர்

Question 7.
மௌரியர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்ற ஒரு தமிழ் நூல் கூறுக.
விடை:
மாமூலனாரின் அகநானுற்றுப்பாடல்

Question 1.
பௌத்தத்தைப் பரப்புவதற்கு அசோகர் என்ன செய்தார்? (ஏதேனும் மூன்று)
விடை:

  • அசோகர் தன்னுடைய மகன் மகிந்தாவையும் மகள் சங்கமித்ராவையும் பௌத்தத்தைப் பரப்புவதற்காக இலங்கைக்கு அனுப்பினார்.
  • தம்மத்தின் கொள்கைகளைப் பரப்புவதற்காக, சமயப் பரப்பாளர்களை அனுப்பி வைத்தார்.
  • பேரரசு முழுவதும் பௌத்தத்தைப் பரப்புவதற்காக தர்ம மகாமாத்திரர்கள் என்றும் புதிய அதிகாரிகளை நியமித்தார்.

Question 2.
மகதத்தின் எழுச்சிக்கான காரணங்களில் ஏதாவது மூன்றினை எழுதுக.
விடை:

  • மகதம் கங்கைச் சமவெளியின் கீழ்ப்பகுதியில் அமைந்திருந்தது. வளம் மிகுந்த இப்பகுதி வேளாண் விளைச்சலை அதிகரித்தது, இது அரசுக்கு நிலையான வருமானத்தை அளித்தது.
  • அடர்ந்த காடுகள் கட்டுமானத்திற்கு மரங்களையும் படைகளுக்கு யானைகளையும் வழங்கியது.
  • அதிக அளவிலான இயற்கை வளங்கள் குறிப்பாக இரும்பு, ஆயுதங்கள் செய்யவும் மேம்படுத்திக் கொள்ளவும் உதவியது.

Question 1.
கலிங்கப்போர் அசோகரது வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது எவ்வாறு?
விடை:

  • கி.மு 261ல் அசோகர் கலிங்கத்தின் மீது போர்தொடுத்து வெற்றி பெற்றார்.
  • 13வது பாறைக் கல்வெட்டில் அசோகரே கலிங்கப் போரின் பயங்கரத்தை விவரித்துள்ளார்.
  • அப்போருக்குப் பின் அசோகர் ஒரு பௌத்தர் ஆனார்.
  • தர்மத்தின் கொள்கையை பரப்புவதற்காக சுற்றுப்பயணங்கள் (தர்மயாத்திரைகள்) மேற்கொண்டார்.
  • அவரது கொள்கை அனைத்து மதங்களின் சாரமாகவுள்ள மனிதாபிமானத்தை உள்ளடக்கியது.
  • இரக்க உணர்வு, அறக்கொடை, தூய்மை போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
  • அசோகர் தன்னுடைய மகன் மகிந்தாவையும் மகள் சங்கமித்ராவையும் பௌத்தத்தைப் பரப்புவதற்காக இலங்கைக்கு அனுப்பினார்.
  • தம்மத்தின் கொள்கைகளைப் பரப்புவதற்காக, சமயப் பரப்பாளர்களை அனுப்பி வைத்தார்.
  • பேரரசு முழுவதும் பௌத்தத்தைப் பரப்புவதற்காக தர்ம மகாமாத்திரர்கள் என்னும் புதிய அதிகாரிகளை நியமித்தார்.

Question 2.
நீ அசோகரைப் போன்ற ஒரு அரசராக இருந்தால் மேற்கொள்ளும் ஏதேனும் ஐந்து நலத்திட்டங்களை எழுதுக.
விடை:

  • அனைவருக்கும் இலவசக் கல்வி
  • இயலாதவர்களுக்கும், முதியோருக்கும், நோயாளிகளுக்கும் தேவையில் உள்ளோருக்கும் இலவச உணவு.
  • அனைத்து குடிமக்களுக்கும் இலவச மருத்துவ சிகிச்சை.
  • வீடற்றவர்களுக்கு இலவச தங்குமிடம்.
  • அனைவருக்கும் நீதி, பாலினம், மதம், சாதி பாகுபாடின்றி சமத்துவம்.

Comments

Popular posts from this blog

How to create Animated 3d chart with R.

Linux/Unix Commands frequently used

R Programming Introduction