நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்- ஆறாம் வகுப்பு அறிவியல் வினா விடை - பருவம் 2

 

VI. மிகக் குறுகிய விடையளி :

Question 1.
தாவரங்கள் மட்குதல் என்ன வகையான மாற்றம்?
விடை:
மெதுவான, வேதியியல் மாற்றம்

Question 2.
உங்களிடம் சிறிது மெழுகு தரப்பட்டால் அதை வைத்து உங்களால் மெழுகு பொம்மை செய்ய முடியுமா? அவ்வாறு செய்ய முடியுமெனில் எவ்வகை மாற்றம் எனக் குறிப்பிடுக.
விடை:
ஆம், இயற்பியல் மீள் மாற்றம்

Question 3.
மெதுவான மாற்றத்தை வரையறு.
விடை:
சில மாற்றங்கள் நிகழ அதிக நேரத்தை எடுத்துக் கொள்கின்றன. (மணிகள் /நாட்கள் / மாதங்கள் / ஆண்டுகள்) இவை மெதுவான மாற்றங்கள் எனப்படும்.
(எ.கா.) நகம் / முடி வளர்தல், பருவநிலை மாற்றம், விதை முளைத்தல்.

Question 4.
கரும்புச் சர்க்கரையை நன்றாக வெப்பப்படுத்தும் போது என்ன நிகழும்? இதில் நடைபெறும் ஏதேனும் இரண்டு மாற்றங்களைக் குறிப்பிடுக.
விடை:

  • சர்க்கரை என்பது சுக்ரோஸ் ஆகும்.
  • சுக்ரோஸின் மூலக்கூறு வாய்ப்பாடு C12H22O11 (அ) C12 (H2O)11
  • கரும்புச்சர்க்கரையை நன்றாக வெப்பப்படுத்தும் போது நீர் மூலக்கூறுகளை இழந்து கார்பனாக சிதைவடைகிறது.
  • இச்செயல்முறையின் மாற்றங்கள்

1.   வேதியியல் மாற்றம்

    1. மீளா மாற்றம்

Question 5.
கரைசல் என்றால் என்ன?
விடை:
கரைபொருள் கரைப்பானில் கரையும் போது கரைசல் உண்டாகிறது. கரைபொருள் + கரைப்பான் → கரைசல்

VII. குறுகிய விடையளி:

Question 1.
காகிதத்தை எரிப்பதால் ஏற்படும் மாற்றங்கள் யாவை? விவரிக்கவும்.
விடை:

  • காகிதத்தை எரிப்பதால் ஏற்படும் மாற்றம் வேகமான மாற்றம் ஆகும்.
  • ஏனெனில் இம்மாற்றம் நிகழ குறைந்த அளவு நேரத்தையே எடுத்துக் கொள்கின்றன.

·         Question 2.
காடுகளை அழித்தல் என்பது விரும்பத்தக்க மாற்றமா? உங்கள் பதிலுக்கான காரணத்தை விவரிக்கவும்.
விடை:
இல்லை, காடுகளை அழித்தல் விரும்பத்தகாத மாற்றம் ஆகும். ஏனெனில், சுற்றுச்சுழலுக்குப் பயன்தராத அல்லது தீங்கு விளைவிக்கக்கூடிய, நம்மால் விரும்பப்படாத மாற்றங்கள் ஆகும்.

·         Question 3.
விதையிலிருந்து செடி முளைத்தல் என்ன வகையான மாற்றம்? விவரிக்கவும்.
விடை:
விதையிலிருந்து செடி முளைத்தல் ஒரு மெதுவான மாற்றம் ஆகும். இம்மாற்றம் நிகழ் அதிக நேரத்தை (மணிகள் / நாட்கள் / மாதங்கள் / ஆண்டுகள்) எடுத்துக் கொள்கின்றன.

VIII. விரிவான விடையளி:

Question 1.
உன்னைச் சுற்றி நடக்கும் மாற்றங்களிலிருந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மாற்றத்திற்கும் தகுந்த எடுத்துக்காட்டு தருக.
அ) மெதுவான / வேகமான மாற்றம்
ஆ) மீள் / மீளா மாற்றம்
இ) இயற்பியல் / வேதியல் மாற்றம்
ஈ) இயற்கையான / செயற்கையான அல்லது மனிதனால் நிகழ்த்தப்பட்ட மாற்றம்.
உ) விரும்பத்தக்க / விரும்பத்தகாத மாற்றம்.



Comments

Popular posts from this blog

How to create Animated 3d chart with R.

Linux/Unix Commands frequently used

R Programming Introduction